search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை மகன் தாக்குதல்"

    சேலம் பனமரத்துப்பட்டி அருகே 2 கிலோ மட்டன் கறி தராத தந்தை மற்றும் மகனை போலீஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம்:

    சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்திக்கவுண்டர் (வயது 75). இவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகில் கறிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் அவ்வப்போது வந்து இலவசமாக கறி வாங்கி செல்வது வழக்கம்.

    இதேபோல் நேற்று மூக்குத்திக் கவுண்டர் கடையில் வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த கடைக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் உள்பட 3 போலீசார், போலீஸ் வாகனத்தில் வந்தனர்.

    பின்னர் வாகனத்தில் இருந்தபடியே 2 கிலோ மட்டன் போடுடா என கறிக்கடைக்காரரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், அதிகாரமாக கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது உங்களை விட எனக்கு வயது அதிகம், நீங்கள் என்னிடம் மரியாதையாக பேசுங்கள் என்று சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலிடம் கடைக்காரர் தெரிவித்தார்.

    இதனால் கோபம் அடைந்த, சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மூக்குத்திக்கவுண்டர் மற்றும் அவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அந்த முதியவரை மட்டும் அடித்து உதைத்து வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

    இதை அறிந்த அவருடைய மகன் விஜயகுமார் (35) போலீஸ் நிலையம் சென்று, எதற்காக எனது தந்தையை அடித்தீர்கள் என கேட்டார். இதைக்கேட்ட அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விஜயகுமாரையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அங்கு வந்த பழனியம்மாளையும் போலீசார், தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    பின்னர் தந்தை, மகன் இருவரிடமும் ஒரு வெள்ளை தாளில் கைரேகை வாங்கி கொண்டு போலீசார் விடுவித்து விட்டனர். காயம் அடைந்த மூக்குத்திக் கவுண்டர், விஜயகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அதே நேரத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் காயமடைந்தது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் அதிகாரிகள் மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக கமி‌ஷனர் சங்கர் விசாரணை நடத்தினர்.

    இந்த தகவலை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், தனது வேலைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக கறிக்கடைக்கு சென்று அங்கிருந்த பழனியம்மாளிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு விட்டு சென்றனர்.

    சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் பரவி வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் ஆகியோரை சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார்.
    திருச்சிற்றம்பலம் அருகே தந்தை மகன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
    திருச்சிற்றம்பலம்:

    திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமம் பள்ளி ரோட்டில் வசித்து வருபவர் பிரான்சீஸ் சேவியர். ( வயது 40 ). இவர் வசிக்கும் பகுதியில் அரசு புறம் போக்கு இடத்தில் பொது பாதை உள்ளது. இந்த பாதையை பலர் நீண்ட வருடங்களாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சம்மந்தப்பட்ட பாதையில் லாரியில் மண் கொண்டு வந்து நிரவிக்கொண்டிருந்தார். அதை இதே பகுதியில் வசித்து வரும் பிரான்சீஸ்சேவியர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜோசப்பின் சகோதரி கிரேசி, கிரேசி அவரது கணவர் அருள், ஜான். அருண்பிரபு, பிரவீன்குமார், சேசு இமானுவேல், மெலீக்கீஸ்ராஜ் ஆகிய 7 பேரும் வீட்டில் இருந்த பிரான்சீஸ்சேவியர், அவரது தந்தை பாக்கியம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரான்சீஸ் சேவியர் மற்றும் அவரது தந்தை பாக்கியம் ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்த ஆரோ அருளின் ஆட்கள் மாந்தோப்பு என்ற இடத்தில் மீண்டும் வழி மறித்து தாக்கி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பிரான்சீஸ் சேவியர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் செய்தார். அதன்பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ஞானசுமதி 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×